திரையரங்குகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?
திரையரங்குகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?
வரும் 10ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க தமிழக் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து வரும் 10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் கணிசமாக இருப்பதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்றும், திரையரங்கு வளாகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திரையரங்கு மற்றும் அதன் வெளிப்பகுதியில் நிற்கும் பார்வையாளர்கள் சமூக இடைவெளி 6 அடியாக இருக்க வேண்டும், திரையரங்கினுள் குளிர்சாதன வசதி இருந்தால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in