#BREAKING: படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு காயம்! எட்டு தையல்களுடன் சிகிச்சை!
#BREAKING: படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு காயம்! எட்டு தையல்களுடன் சிகிச்சை!

நந்தா பெரியசாமி இயக்கத்தில், ரகுநாதன் தயாரிப்பில், கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்தப் படத்தில், பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்துடன், சரவணன், ஜாக்குலின், டேனியல், ‘மைனா’ நந்தினி, சிங்கம் புலி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது நடிகர் சேரன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அவருக்கு 8 தையல் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் நந்தா பெரியசாமி கூறியபோது, “இந்தப் படத்திற்காக செட் அமைப்பதற்கு பதிலாக, தயாரிப்பாளர் ரகுநாதன் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பெரிய பிரமாண்டமான வீடு கட்ட ஆரம்பித்தார். அந்த வீடுதான் கதைக்களம். கதைப்படி, சேரன் வீட்டை சுற்றிப் பார்க்கும் போது கீழே விழுமாறு காட்சி.
இந்தப் படத்தில் சரவணன் அண்ணனாகவும், சேரன் தம்பியாக நடித்து வருகின்றனர். கீழே விழும் காட்சியில் சேரன் நிஜமாகவே வழுக்கி விழுந்து விட்டார் . அவருக்கு எட்டு தையல் போடப்பட்டது. தையல் போடப்பட்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து நடித்துக் கொடுத்தார்.
நேற்று காலை அவருக்கு தையல் பிரிக்கப்பட்டது. அந்த வலியிலும் கடந்த மூன்று நாட்களாக அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தார். இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். எல்லாம் முடிந்த பிறகுதான் நான் இதை வெளியே சொல்கிறேன்” என்றார்.

