அண்ணாத்த படம் ஷூட்டிங் நிறைவு! சென்னை திரும்பினார் ரஜினி!
அண்ணாத்த படம் ஷூட்டிங் நிறைவு! சென்னை திரும்பினார் ரஜினி!

ஊரடங்குக்கு இடையில் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது ரஜினி தொடர்பான அனைத்து காட்சிகளும் நேற்றுடன் முடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். ரஜினிக்கு லதா ரஜின், ஆரத்தி எடுத்து திருஷ்டி சுற்றிப் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை வந்தவுடன் தன்னை இரண்டு வார காலம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தை தொடர்ந்து ‘அண்ணாத்த’ படக்குழு கொல்கத்தா கிளம்புகிறது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், அதை தொடர்ந்து ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைகிறது. ஏற்கனவே திட்டமிட்டப்படி தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிடும் முனைப்பில் படக்குழு பணியாற்றி வருகிறது,

