ரசிகர்களிடம் சிக்கிய சீரியல் காதல் ஜோடிகள்! செம்பருத்தி நடிகை ஓபன் டாக்!

ரசிகர்களிடம் சிக்கிய சீரியல் காதல் ஜோடிகள்! செம்பருத்தி நடிகை ஓபன் டாக்!

ரசிகர்களிடம் சிக்கிய சீரியல் காதல் ஜோடிகள்! செம்பருத்தி நடிகை ஓபன் டாக்!
X

தொலைக்காட்சி நடிகர் ஆர்யனும் பிரபல சீரியல் நடிகை ஷபானாவும் காதலித்து வருவதை உறுதி செய்யும் இன்ஸ்டா பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் செழியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்யன். இவரும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக வதந்திகள் வந்தபடியே இருந்தன.

தற்போது அதை உறுதி செய்யும் வகையிலான இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறிப்பிட்ட பதிவில் ஆர்யனை டேக் செய்த ரசிகர் ஒருவர் அவரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதற்கு நடிகர் ஆர்யன், செம்பருத்தி ஷபானாவை டேக் செய்து “இவங்களுக்கு நான் என்ன பதில் சொல்வது” என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகை ஷபானா 'என்னுடையது' என ஆரியனுக்கு ரீப்ளே அளித்துள்ளார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஆர்யன் மற்றும் ஷபானா இருவரும் காதலித்து வருவது உறுதி என்று கூறி வருகின்றனர். ஆனால் நடிகர் ஆர்யனும் ஷபானாவும் தங்களுடைய நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் உள்ளனர்.

Tags:
Next Story
Share it