Theme Check

‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ இனி ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என மாற்றம்..!

‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ இனி ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என மாற்றம்..!

‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ இனி ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என மாற்றம்..!
X

“நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதின் பெயர் இனி ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என மாற்றப்படுகிறது” என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த விருதுகளை ஜனாதிபதியிடம் இருந்து வீரர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

இந்நிலையில், இந்த விருதின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் எனக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதானது, இனிமேல், ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருது என அழைக்கப்படும். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1423538297842769921

Tags:
Next Story
Share it