அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்; அதிமுக தலைவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்..!

அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்; அதிமுக தலைவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்..!

அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்; அதிமுக தலைவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்..!
X

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.

மரணமடைந்த மதுசூதனன் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு இன்று அதிகாலை எடுத்து வரப்பட்டது. அதன் பின்னர், மதுசூதனன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில், மதுசூதனன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார்.

முன்னதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முன்னணி நிர்வாகிகள், திமுக அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags:
Next Story
Share it