#BREAKING:- இந்திய அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகல் ?
#BREAKING:- இந்திய அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகல் ?

கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி மேனேஜராக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு வரை அப்பதவியில்தான் இருந்தார். அடுத்து அனில் கும்ளே இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில கருத்து மோதல் காரணமாக ஒரே ஆண்டில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ரவி சாஸ்திரிக்கு பயிற்சியாளர் பதவி கிடைத்தது. இவரது பயிற்சியின்கீழ், இந்திய அணி இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருடன் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. அதன்பிறகு, அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்கு பயிற்சியாளராகச் செயல்படுபவர் 60 வயது வரை மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடியும். தற்போது ரவி சாஸ்திரிக்கு 59 வயதாகிவிட்டது. இதனால், அவர் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டாலும் ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார். இதன்காரணமாகத்தான், ரவி சாஸ்திரி இந்த முடிவினை எடுத்திருப்பாகத் தெரிகிறது. மேலும், புது பயிற்சியாளரை நியமிக்கும் முடிவில்தான் பிசிசிஐ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

