Theme Check

அடக்கொடுமையே..!! கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால் கால்வாயில் பாய்ந்த கார்..!!

அடக்கொடுமையே..!! கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால் கால்வாயில் பாய்ந்த கார்..!!

அடக்கொடுமையே..!! கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால் கால்வாயில் பாய்ந்த கார்..!!
X

கர்நாடகாவைச் சேர்ந்த குடும்பத்தினர் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து ஆலப்புழாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். பயணத்தின் தொடக்கத்திலிருந்தே அவர்கள் திசையை அறிந்துகொள்ள கூகுள் வரைபடத்தை நம்பியிருந்தனர். அவர்கள் குருப்பந்தாரா கடவு என்ற இடத்தை அடைந்ததும், நேராக செல்லுமாறு வரைபடம் பரிந்துரைத்தது.

சாலையின் பெரிய வளைவைக் கவனிக்காமல் ஓட்டுநர் நேராகச் சென்று கால்வாயில் காரை விட்டுள்ளார். அப்பகுதியினர் டிரைவரை பார்த்து கூச்சலிட்டு எச்சரித்த நிலையிலும் பலனில்லை. இதனிடையே கார் கால்வாயில் புகுந்தது. அப்பகுதியில் மழை பெய்து வருவதால், கால்வாயில் அதிகளவில் தண்ணீர் நிரம்பி செல்கிறது.

பொதுமக்கள் முதலில் பயணிகளை மீட்டனர். பின்னர் வாகனத்தை மீண்டும் சாலையில் தள்ள முயன்றனர். பின்னர், கால்வாயில் இருந்து வாகனத்தை இழுக்க லாரி பயன்படுத்தப்பட்டது.
Next Story
Share it