எங்க மீசைல மண் ஒட்டலை! குப்புற விழுந்த பிறகு சமாளித்த சீனா!
எங்க மீசைல மண் ஒட்டலை! குப்புற விழுந்த பிறகு சமாளித்த சீனா!

உலகின் பல நாடுகள் அவசரகால பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவக்ஸின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளில் இலவசமாகவும், வர்த்த ரீதியாகவும் இந்தியா விநியோகித்து வருகின்றது

சீனாவும் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து மற்ற நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசி விநியோகத்தில் சீனா இந்தியாவிடம் தோல்வியடைந்து விட்டதாகவும் , அதை சில அறிக்கைகள் மூலம் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைதளத்தில் வெளியாகின. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி ,தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு இந்தியா விநியோகித்து வருகின்றது.

அது வரவேற்கத்தக்க விஷயம் தான். இதில் சீனா இந்தியாவிடம் தோற்று விட்டது என்று கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். சீனாவில் வசித்து வரும் சுமார் 140 கோடி மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். அதன் பிறகுதான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பது பற்றி சிந்திக்க முடியும் என்றும் விளக்கமளித்துள்ளார். உலக அளவில் சீனா கொரோனா தடுப்பூசிகளை 53 நாடுகளுக்கு வழங்கி வருகிறது. ஐ.நா.வின் கோவக்ஸ் திட்டத்திற்கு 1 கோடி தடுப்பூசிகள் வழங்கவும் சீனா ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

