Theme Check

எனக்கேவா.. ஜல்லிக்கட்டில் பல காளைகளை அடக்கியவன் நான்.. ஓ.பன்னீர்செல்வம் பளீச்

எனக்கேவா.. ஜல்லிக்கட்டில் பல காளைகளை அடக்கியவன் நான்.. ஓ.பன்னீர்செல்வம் பளீச்

எனக்கேவா.. ஜல்லிக்கட்டில் பல காளைகளை அடக்கியவன் நான்.. ஓ.பன்னீர்செல்வம் பளீச்
X

சட்டசபையில் நேற்று கைத்தறி, வணிக வரி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக எம்எல்ஏ சேகர், 'ஜல்லிக்கட்டு நாயகன்' என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை புகழ்ந்தார்.

பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார். அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றார்? எத்தனை காளைகளை அடக்கினார்? என அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

இதற்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், ஜல்லிக்கட்டு நடக்கவே நடக்காது என்று இருந்த நிலையில், அதற்காக சட்டம் இயற்றி, நடத்தி காட்டியவர் பன்னீர்செல்வம். அதனால் தான் அவரை, ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறோம்.

jallikaddu

அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, 2005-ல் அதிமுக ஆட்சியில், மதுரையில் ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. 2006ல் திமுக ஆட்சியில் தான் தடை நீக்கப்பட்டது என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அதிமுக சேகர், அமைச்சர் சாமிநாதன், செங்கோட்டையன் ஆகிய மூவரும் சொந்தக்காரர்கள். அதனால், தங்களுக்குள் விவாதம் நடத்துகின்றனர். இப்பிரச்னையை இத்தோடு விட்டு விடுங்கள் என்றார்.

அதன்பிறகு பேசிய ஓ.பன்னீர்செல்வம், தாம் இளவயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கினேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது, "காளை"-ஐ விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியிலேயே சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று அவசர சட்டம் நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, அது சட்டமான பின்னர் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் "ஜல் ஜல்" என்று நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

jallikaddu

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, ஜல்லிக்கட்டு போட்டியை திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு தடை செய்யவில்லை. பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றம் சென்றதால், நீதிமன்றம் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது. மீண்டும் போட்டிகள் நடைபெற அதிமுக அரசு காரணமல்ல, மக்கள் போராட்டத்தால் மீண்டும் போட்டிகள் சாத்தியமானது, என தெரிவித்தார்.

Next Story
Share it