Theme Check

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!! உயிரிழந்த காதலன் வீட்டிலேயே காதலி தற்கொலை..!!

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!! உயிரிழந்த காதலன் வீட்டிலேயே காதலி தற்கொலை..!!

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!! உயிரிழந்த காதலன் வீட்டிலேயே காதலி தற்கொலை..!!
X

உயிரிழந்த காதலன் வீட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டதை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா. இவர் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரைப் பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் தனது வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிலிருந்து வீட்டை விட்டு வெளியே செல்லாமல் சுதா கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனை கண்ட பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர். இதையறிந்த சுதா காதலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காதலன் வீட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it