காதல் சின்னத்தை பார்த்து ரசித்த காதல் மன்னன்.. வைரலாகும் புகைப்படங்கள் !!

காதல் சின்னத்தை பார்த்து ரசித்த காதல் மன்னன்.. வைரலாகும் புகைப்படங்கள் !!

காதல் சின்னத்தை பார்த்து ரசித்த காதல் மன்னன்.. வைரலாகும் புகைப்படங்கள் !!
X

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக அஜித் உள்ளார். இவர் பெரும்பாலும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை. இதனால் இவரை பொது இடங்களில் காண்பது பெரிதும் அரிது.

இந்தநிலையில், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அஜித் அசத்தினார்.

ajith

இதனையடுத்து வலிமை படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். வெளிமாநிலம், வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு டெல்லி சென்றுள்ளார். அவர் எதற்கு டெல்லி சென்றார் என்ற நிலை இல்லாமல் இருந்தது. தற்போது, மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பயிற்சிக்கு இடையில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்த தமிழ் திரையுலக ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

newstm.in

Tags:
Next Story
Share it