Theme Check

பகீர்! கொரோனாவை விட கொடிய நோய் பரவ வாய்ப்பு!

பகீர்! கொரோனாவை விட கொடிய நோய் பரவ வாய்ப்பு!

பகீர்! கொரோனாவை விட கொடிய நோய் பரவ வாய்ப்பு!
X

உலகம் முழுவதுமே கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக போக்கு காட்டி உயிர்களை பலிவாங்கி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களும், விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து விழி பிதுங்கி நிற்கிறார்கள். என்ன தான் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருந்தாலும், அந்த தடுப்பூசி என்ன விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று இன்று வரையில் சரியான விளக்கங்கள் கிடையாது. இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால், கொரோனா வைரஸ் தாக்காது என்றெல்லாம் கிடையாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லவை தான் இந்த தடுப்பூசி என்றும், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கொரொனா வைரஸ் எல்லாம் ஜூஜூபி. அதை விட கொடிய உயிர்கொல்லி நோய் வேகமாக பரவி, லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் உலக விஞ்ஞானிகள். இதை எச்சரிக்கையாகவே விடுத்திருக்கிறார்கள்.

இது குறித்து பேராசிரியர் ஜீன் ஜேக்கஸ் எச்சரித்திருக்கிறார். ஆப்பிர்க்க மக்களை காவு வாங்கிய எபோலா வைரஸ் பரவலைக் கண்டுபிடிக்க உதவியர் இந்த பேராசிரியர் தான். கொரோனாவை காட்டிலும் கொடிய உயிர்க்கொல்லி கொள்ளை நோய் பரவ போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

தற்காலிகமாக டிசிஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொள்ளை நோய் கூடிய விரைவில் உலகம் முழுவதுமே பரவும் என்று எச்சரித்துள்ளார் பேராசிரியர் ஜீன் ஜேக்கஸ். இந்த நோய் கொரோனா வைரஸைப் போன்றே வேகமாக பரவும் தன்மையுள்ளதாகவும், எபோலோ போலவே லட்சக்கணக்கில் உயிர்களைக் காவு வாங்குவதாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த டிசிஸ் எக்ஸ் வைரஸ் மட்டுமல்லாமல், இனி வருங்காலங்களில் புது புது டிசைனில் கொடிய வைரஸ்கள் உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார். ஆப்பிரிக்க காடுகளில் இருந்து இப்படி உருவாகும் வைரஸ்கள் மிக கொடூரமானதாகவும், மிக வேகமாக பரவும் தன்மையுள்ளதாகவும் இருக்கும் என்று எச்சரிக்கும் ஜேக்கஸ், பெரும்பாலும் விலங்குகளிடம் இருந்து பரவக் கூடிய நோய் தொற்றுகள் இனி ஏராளமாக உருவாகும் என்கிறார். இதற்கு ஆதாரமாக இன்பிளுயென்ஸா, ரேபிஸ், மஞ்சள் காய்ச்சல் என பல்வேறு நோய்கள் விலங்குகளிடம் இருந்து தான் இதுவரையில் மனிதர்களுக்கு பரவியுள்ளதாகவும், எதிர்காலத்தில் தொற்று நோய்கள் சர்வ சாதாரணமாகி விடும் என்றும் மரண பயத்தைக் காட்டுகிறார் பேராசிரியர் ஜீன்ஸ்.

Tags:
Next Story
Share it