Theme Check

பகீர் சம்பவம்! ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டவர் கார் ஏற்றி கொலை!!

பகீர் சம்பவம்! ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டவர் கார் ஏற்றி கொலை!!

பகீர் சம்பவம்! ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டவர் கார் ஏற்றி கொலை!!
X

தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவர் குறித்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் செய்த நபர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் என்பவர் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 16ஆம் தேதி செந்தாமரைக் கண்ணன் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இவரின் வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Death

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த செந்தாமரைக்கண்ணணுக்கு, சாம்ராட் பாயண்டியன் குடும்பதிற்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனால் இரண்டு குடும்பத்திற்கு முன்விரோதம் 15 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சாம்ராட் பாண்டியன் கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து அவரது நண்பர்கள் முகநூலில் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.

tut murder

அதில் செந்தாமரைக்கண்ணன், இறைவனுடைய தண்டனை என கமெண்ட் செய்திருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாம்ராட் பாண்டியனின் நண்பர்கள் மகேஷ், சுடலைமணி ஆகியோர் ந்தாமரைக்கண்ணனை கார் ஏற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it