Theme Check

பகீர் தகவல்.. காணாமல் போன கணவர்.. வாழைக்கு உரமாக்கிய மனைவி..!

பகீர் தகவல்.. காணாமல் போன கணவர்.. வாழைக்கு உரமாக்கிய மனைவி..!

பகீர் தகவல்.. காணாமல் போன கணவர்.. வாழைக்கு உரமாக்கிய மனைவி..!
X

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் கி.அய்யர் என்ற ராஜசேகர் (47). விவசாயியான இவர், தனது சகோதரியின் மகள் விஜயலட்சுமியை (40) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசேகர், மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வெளியூர் சென்று விடுவாராம்.

இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற ராஜசேகர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பல மாதங்களாக ராஜசேகர் குறித்த தகவல் தெரியாத நிலையில், விஜயலட்சுமியின் தம்பி சிவகுமார் விசாரித்துள்ளார். அப்போது, ராஜசேகரை கொலை செய்து வாழைத்தோப்பில் புதைத்து விட்டதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி சரக துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் வருவாய்த் துறையினருடன் சென்று வாழைத் தோட்டத்தை பார்வையிட்டனர். பின்னர், விஜயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, “ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டு விட்டு வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த ராஜசேகர் என்னை கண்டித்தார்.

கடந்த 9 மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட பிரச்னையின் போது, நானும் மோகனும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து அவருக்கு சொந்தமான வாழைத் தோப்பில் உடலை புதைத்தோம்.

தம்பி சிவக்குமார், ராஜசேகர் மாயமானது குறித்து அடிக்கடி கேட்டு வந்த நிலையில் உண்மையை கூறி விட்டேன்” என்று ராஜலட்சுமி கூறினார்.

இதையடுத்து, ராஜசேகர் சகோதரர் கி.ராமசாமி அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ராஜசேகர் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story
Share it