Theme Check

போர்க்கண்ட சிங்கம்.. விக்ரம் பட ரசிகர்களுக்கு இன்று செம அப்டேட் !

போர்க்கண்ட சிங்கம்.. விக்ரம் பட ரசிகர்களுக்கு இன்று செம அப்டேட் !

போர்க்கண்ட சிங்கம்.. விக்ரம் பட ரசிகர்களுக்கு இன்று செம அப்டேட் !
X

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா (சிறப்புத் தோற்றம்) உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

vikram

விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே படத்திற்கான புரமோஷன் பணிகளில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே பத்தல பத்தல எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று மற்றொரு பாடலை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

vikram

இந்த நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் போர்க்கண்ட சிங்கம் என்ற பாடல் லிரிக் வீடியோவாக இன்று வெளியாகிறது. இன்று காலை 11 மணிக்கு யூடியூப் தளத்தில் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

newstm.in

Next Story
Share it