வெறித்தனம்.. 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு !
வெறித்தனம்.. 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு !

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. ‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் டீசரையும் ட்ரெய்லரையும் எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. நம்ம ஆட்டம் இனிமே வேறமாதிரி இருக்கும் என்றும், ரத்த களறியாகவும் முகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பொறுத்திக்கொண்டும் இருக்கும் விஜயின் புகைப்படம் வெளியிட்டுள்ளது.
பீஸ்ட்’ ட்ரெய்லர் எப்படி இருந்தாலும் நெல்சன் ஏமாற்றமாட்டார் என்றே நம்புகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
The much-awaited #BeastTrailer is releasing on April 2nd @ 6 PM
— Sun Pictures (@sunpictures) March 30, 2022
Namma aattam inimey vera maari irukum 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastTrailerOnApril2 #BeastModeON #Beast pic.twitter.com/EtpNDVKv4L
newstm.in

