ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்.. உலக சாதனை படைத்த பெண் யார் தெரியுமா?
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்.. உலக சாதனை படைத்த பெண் யார் தெரியுமா?

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (37). இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி. இதில் சித்தோல் பிரிட்டோரியா கருவுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிறு வழக்கத்தை விட பெரிதாக இருந்ததால் சிசேரியன் மூலம் குழந்தைகளை பெற்றார். அப்போது இவருக்கு 10 குழந்தைகள் பிறந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் அடங்கும்.
எனக்கு பத்து குழந்தைகள் பிறந்துள்ளது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என்று அப்பெண்ணின் கணவர் டெபோஹோ தெரிவித்துள்ளார்.ஆனால் சித்தோல், தனது கர்ப்பம் இயற்கையானது என்றும், அவர் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெறவில்லை என்றும் கூறி உள்ளார்.

இதனிடையே, சித்தோலின் 10 குழந்தை பிரசவம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மாதம் மாலியாவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தார். தற்போது அந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
இது குறித்து கின்னஸ் உலக சாதனை புத்தக அதிகாரிகள் கூறுகையில், சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியை கின்னஸ் உலக சாதனை அறிந்திருக்கிறது. மேலும் நாங்கள் எங்கள் வாழ்த்துக்களையும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை அனுப்பி உள்ளோம். தற்போதைய நேரத்தில், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பதால் இதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. ஒரு சிறப்பு ஆலோசகருடன் எங்கள் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும் என்று கூறி உள்ளார்.
newstm.in

