இறந்துகிடந்த 10 ஆடுகள்.. காரணம் புலியா? மர்ம விலங்கா? - அச்சத்தில் மக்கள்
இறந்துகிடந்த 10 ஆடுகள்.. காரணம் புலியா? மர்ம விலங்கா? - அச்சத்தில் மக்கள்

விலங்கு தாக்கி 10 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக புகார் கூறி வருகின்றனர். புலிகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். எனினும் வனத்துறையினர், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலூர் அருகே விவசாயி சந்திரப்பா என்பவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் திடீரென உயிரிழந்தன. அதாவது சுக்கோண்டஹள்ளி என்ற கிராமத்தில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. இதனை கண்ட சந்திரப்பா பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.

ஆனால், இறைதேடி வந்த மர்ம விலங்கு தாக்கியதில் ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆடுகளை கொன்றது புலிகளா அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்கா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் கூறிவந்த நிலையில், ஆடுகளை சிறுத்தை தாக்கி இருக்கக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in

