Theme Check

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை!!
X

பண மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். காவல்துறையினர் அவரை தொடர்ந்து தீவிரமாக தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் கர்நாடகா மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

rajendra balaji

ஆனால் அதன் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, நேற்று காலை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்கள் குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it