Theme Check

இன்று நடக்கவிருக்கும் தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டு போட்டால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள்..!!

இன்று நடக்கவிருக்கும் தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டு போட்டால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள்..!!

இன்று நடக்கவிருக்கும் தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டு போட்டால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள்..!!
X

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இன்று 4-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், லக்னோவில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரியின் முதல்வர் ராகேஷ் குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதன்படி, இந்த தேர்தலில் இன்று மற்றும் அதற்கடுத்த கட்டங்களில் நடைபெறும் தேர்தலில் எந்தெந்த மாணவர்களின் பெற்றோர் ஓட்டு போடுகிறார்களோ, அந்த மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன் வழியே 100 சதவீத வாக்கு பதிவை ஏற்படுத்துவது என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம். இதனால், தேர்ச்சி பெற இயலாத நிலையில் உள்ள மாணவர்கள் கூட தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:
Next Story
Share it