மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு!!
மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு!!

பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் பத்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் அங்கு மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நாளில் 10 உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையின் போது வீட்டிலேயே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
newstm.in

