100 நாள் திமுக ஆட்சி! ஸ்டாலின் செய்த அசத்தலான செயல்கள்!

100 நாள் திமுக ஆட்சி! ஸ்டாலின் செய்த அசத்தலான செயல்கள்!

100 நாள் திமுக ஆட்சி! ஸ்டாலின் செய்த அசத்தலான செயல்கள்!
X

தமிழக முதல்வராக திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைகிற இந்த தருணத்தில், இந்த 100 நாட்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த 100 சிறந்த விஷயங்களின் லிஸ்ட் இதோ...

1.கொரோனா தொற்று பரவல் சமயத்தில் வருமானமின்றி தவித்த தமிழக மக்கள் அனைவருக்கும் 4000 ரூபாய் கொரோனா கால நிவாரண நிதி!
2ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு!
3.மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டம்!
4.தனியார் மருத்துவமனையிலும் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை திட்டம்!
5.உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்திற்கு தனி துறை முதல்வரின் நேரடி கண்காணிப்பு!
6.கொரோன பரவலை தடுக்க மாவட்டம் தோறும் WARROOM நிறுவி ஒருங்கிணைந்த செயல்பாடு!
7.பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் - தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு!
8.கொரோனாவிற்கு பலியான மருத்துவ துறையினர் குடும்பங்களுக்கு 25 லட்சம் உதவி தொகை!
9.அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இலவசம்!
10.செவிலியர்கள் /தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை!

stalin

11.மேட்டூர் அணை குறித்த தேதியில் திறப்பு!
12.தென் சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை திட்டம்!
13.மதுரையில் கலைஞர் நூலகம் அறிவிப்பு!
14.இலக்கிய மாமணி விருது அறிவுப்பு!
15.தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசு வீடு
16.திருவாரூர் மாவட்டத்தில் உணவுதானிய சேமிப்புக்கிடங்குகள்
17.மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கும் அரசு பேருந்தில் இலவசப் பயண திட்டம்!
18.இயல் இசை நாடக துறை கலைஞர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம்!
19.முகாம்களுக்கு வெளியே வசிக்கும் 13,000இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு 4000 நிவாரண நிதி!
20.தமிழ் அறிஞர்கள் அய்யா கி.ரா, அய்யா.இளங்குமரனார் அவர்களின் மறைவுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

stalin

21.தகைசால் தமிழர் அரசு விருது தொடக்கம்!
22. விருது பெற்ற தகைசால் தமிழர் மறைவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
23.பேரறிவாளனுக்கு பரோல்
24.தூத்துக்குடி sterlite போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது!
25.COVID தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும்.
26.Sterlite ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி
27.எல்லையில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4. இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது !
28.அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களின் ஓய்வூதி நிலுவைத் தொகை 497.32 கோடி கொடுக்கப்பட்டது!-
29.கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றோருக்கு நிவாரண உதவித்தொகை ரூ.4000 வழங்கப்பட்டது!
30.நீட் தேர்வு ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது!

MK_Stalin

31.மின்துறை சீர்செய்யப்பட கணினி வசதியுடன் - நுகர்வோர் சேவை மையம் தொடக்கம்!
32.தற்காலிக பணியாளர்களான இருந்த 1220 செவிலியர்களுக்கு பணி நியமனம்!
33.கோவில்களில் தமிழில் அர்ச்சனை!
34.அறநிலைய துறையை சார்பில் கோவில் சொத்து விவரம் பதிந்தது! 35.கோவில் சொத்துக்கள் மீட்பு பணி!
36.இந்திய அளவில் 27% ஓபிசி இடஒதுக்கீடு சட்ட போராட்ட வெற்றி!
37.தமிழகத்தில் 10.5% MBC வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை!
38.தமிழ்நாட்டில் 2000 கோடியில் defense corridor முதலீடு!
39.கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள்!
40.சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் படத்திறப்பு

Stalin modi

41.தமிழ்நாட்டு வேலையில் தமிழ் இளைஞர்களுக்கு 75% முன்னுரிமை!
42.உலக பொருளாதார அறிஞர்களை 5 பேரை கொண்ட குழு!
43.விஷன் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின் படி 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் செயல் திட்டம்!
44.முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ் நாடு என்ற செயல் திட்டத்தில் 47 தொழில் திட்டங்கள் ரூ.28,664 கோடி முதலீடுகள்
45.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் இது வரை 1 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள்!
46.திண்டிவனம்-செய்யார் போன்ற ஊர்களில் தொழிற்சாலை அமைக்கும் செயல் திட்டம்!
47.எண்ணெய் எடுக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற அறிவிப்பு!
48.ஏழு தமிழர் விடுதலைக்காக சட்ட முயற்சிகள்!
49."நீட்" ஆய்வு குழுவுக்கு சட்டப்போராட்டம்!
50.மக்களை தேடி மருத்துவம் திட்டம்

MK-Stalin 1

51.பாட புத்தகத்தில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதி பெயர்கள் நீக்கம்!
52.விவசாயத்திற்கு முதன் முறையாக தனி பட்ஜெட் அறிவிப்பு!
53.கல்வித்துறையில் நிரப்பப்படாமல் இருந்த ஆசிரியர் பணிநியமனங்கள்!
54.புதிதாக 120 உழவர் சந்தை அமைக்கும் திட்டம்!
55.பெண்காவலர்கள் பாதுகாப்பு/பந்தகோஸ்து பணிகளில் இருந்து விலக்கு!
56.அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கல்லூரி கட்டும் செயல்திட்டம்!
57.கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி சீர்கேட்டை விளக்க 120 பக்க வெள்ளை அறிக்கை!
58.தொழிற்கல்வி படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு !
59.முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அறிவிப்பு!
60.covid ஆக்சிசன் உற்பத்திக்காக துவங்கப்பட்ட தூத்துக்குடி Sterlite ஆலை நிரந்தரமாக மூடல்!

stalin

61.58000 அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும்!
62.ITI மாணவர்களுக்கு சென்னை மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
63.பயிற்சி மருத்துவர்,முதுகலை மேற்படிப்பு மருத்துவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி அரசாணை!
64.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இந்தாண்டு விவசாயம், பொது என 2 நிதிநிலை அறிக்கைகள்!
65. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக காவலர்களுக்கு வார விடுப்பு எடுக்கும் உரிமை!
66.நிலுவையில் இருந்த அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!.
67.டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும்!
68.முதியோர் இல்லங்கள் சிறப்பாக இயங்குவதற்கு தனி குழு அமைக்கப்பட்டது!
69.குழந்தை திருமணம் தடுப்பு கண்காணிக்க குழு!
70.பணிபுரியும் மகளீர்க்கு - விடுதி வசதி அமைக்க நடவடிக்கை!

stalin

71. 210 பெட்டிகளுடன் 70 தானியங்கி மெட்ரோ ரயிலுக்காக ஒப்பந்தம்!
72.சென்னை விமானநிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை!
73.தழும்பில்லா அறுவை சிகிச்சை மைய திட்டம்!
74.ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் திட்டம்!
75.ரிப்பன் மாளிகை,தலைமை செயலகத்தில்-தமிழ்வாழ்க பலகைகள்!
76.நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ரேஷன் கார்டுகள் மீண்டும் தொடக்கம்!
77.கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும்!
78.அன்பளிப்பாக வந்த 2 லட்சம் நூல்களை -நூலகங்களுக்கு அளிப்பு!
79.அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை!
80.சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவாளர்கள் சமதளத்தில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவு!

stalin

81.சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்க அனுமதி!
82. திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 78 ஈழத் தமிழர்கள் விடுதலை!
83.அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கைத்தறி ஆடைகளை அணிய அரசு அறிவுறுத்தல்!
84.பேருந்துகளில் மீண்டும் திருக்குறள்!
85.காலணி தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயம்!
86.உழவர் நலனுக்கு எதிரான #FarmLaws, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் #CAA ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு. அதனை வலியுறுத்தி எதிர்வரும் நிதிநிலைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
87.முதன்முறையாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பெண் ஆட்சியர்கள் IAS!
88.அர்ச்சர்களாக விரும்பும் மகளிர்க்கு பயிற்சி அளிக்க அரசு ஆவணம் செய்யும்!
89.அரசு ஊழியர்கள் பணியிடை மாறுதல்கள் அனைத்தும் Transparency யுடன் இருக்க ஆணை!
90.கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி அரசாணை வெளியிடப்படும்!

stalin

91.ICF பணியில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!
92.காவேரி ஆற்றை தூர்வாரும் பணிகளை ஆய்வு/கண்காணிக்க 4 IAS அதிகாரிகள் நியமனம்!
93.கொரோனா நிவாரண நிதி விவரங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம்!
94.காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்ய நடவடிக்கை!
95.தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அறிவுரைக்குழு உறுப்பினராக பேரா.சுபவீ
96.பத்திரிக்கையாளர்கள் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ்!
97.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள இரு மாணவிகளுக்கு அரசு வேலை!
98.வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம்!
99.கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து வள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்க முடிவு!
100.இந்தியாவின் சிறந்த 10 முதல்வர்கள் பட்டியலில் 68% த்துடன் முதல்வர் ஸ்டாலின் முதலிடம்!

Tags:
Next Story
Share it