Theme Check

ஒரே நேரத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொலை: அதிர்ச்சி சம்பவம் !!

ஒரே நேரத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொலை: அதிர்ச்சி சம்பவம் !!

ஒரே நேரத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொலை: அதிர்ச்சி சம்பவம் !!
X

100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பத்ராவதி கிராமத்தில் நாய்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல் அடிப்படையில் நடந்த சோதனையில், பல இடங்களில் நாய்கள் கொன்று புதைககப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன்படி, நூற்றுக்கும் அதிகமான நாய்களின் உடல்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து நாய்கள் இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதேபோன்று வேறு இடங்களிலும் நாய்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police

கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் இந்த கொடூர சம்பவத்தைச் செய்துள்ளனர். இறந்த நாய்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விஷம் வைத்து நாய்கள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் உயிருடனும் நாய்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த சம்பவங்களுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் நாய்களைப் பிடிக்கவோ, கொலை செய்யவோ யாருக்கும் உத்தரவிடவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it