மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!
மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “நீட் தேர்வு முடிந்ததும் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
குளறுபடிகள் இல்லாமல் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17-ம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
தொலைந்து போன சான்றிதழை திரும்பப் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்” என்றார்
அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story

