Theme Check

சொத்துகளை பறித்துக்கொண்டு விரட்டிவிட்டனர்.. 3 மகன்கள் மீது 103 வயது மூதாட்டி புகார் !!

சொத்துகளை பறித்துக்கொண்டு விரட்டிவிட்டனர்.. 3 மகன்கள் மீது 103 வயது மூதாட்டி புகார் !!

சொத்துகளை பறித்துக்கொண்டு விரட்டிவிட்டனர்.. 3 மகன்கள் மீது 103 வயது மூதாட்டி புகார் !!
X

சொத்துகளை அபகரித்துக் கொண்டு விரட்டிய மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் 103 வயது மூதாட்டி ஒருவர் புகார் மனு அளித்த சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பள்ளத்துகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி துளசியம்மாள் (103). இந்த தள்ளாடும் வயதிலும் துளசியம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு 3 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் எனக்கு சொந்தமான 5.50 ஏக்கர் நிலத்தை எனது 3 மகன்கள் அபகரித்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

fdg

எந்த மகனும் என்னை வீட்டிற்குள் சேர்ப்பதில்லை. தற்போது எனது மகள் நாகம்மாள் பராமரிப்பில் இருந்து வருகிறேன். என்னிடம் சொத்தை அபகரித்த, மகன்களிடமிருந்து சொத்தை மீட்டுத்தர வேண்டும், இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்னும் ஒரு வாரத்திற்குள் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறினார்.

சொத்தை பெற்றுக்கொண்டு தாயை மகன்கள் விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it