வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது.. ஆவேசமான அமைச்சர் !
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது.. ஆவேசமான அமைச்சர் !

மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். இவர் பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சவுடார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான்.
எனவே, தற்போது தற்காலிக மசோதவாக நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தார். தற்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களிடம் செல்வாக்கை பெறாதவர்கள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதகவும் கூறினார்.

வன்னியர் சமூகத்துக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும்போது, சீர்மரபினர் உள்ளிட்ட 68 சமூதாய மக்களுக்கு 7% உள் இட ஒதுக்கீட்டையும் அறிவித்தது தமிழக அரசு. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள. அமைச்சர்களை பாதிக்கப்பட்ட சமூதாயத்தினர் வாக்குசேகரிக்க அனுமதிக்காமல் போராடி வருகின்றனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட தனது சொந்த தொகுதியில் வாக்குசேகரிக்க முடியாத நிலை உண்டானது.
இந்த நிலையில், இதனை உணர்ந்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இந்த இட ஒதுக்கீட்டு சட்டம் தற்காலிகமானது என்றும், ஆறு மாதங்களுக்கு பின், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய பின் தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீட்டை காரணம் காட்டிதான் பாமகவை அதிமுக தன்பக்கம் இழுத்து. அதிகமான தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in

