Theme Check

பிரதமர் மோடியால் வீடு தேடி வந்த ஆதார் கார்டு- பன்மடங்கு மகிழ்ச்சியில் 105 வயது பாட்டி..

பாகிரதி அம்மாளிடம் 105 வயதாகிறது ஆதார் இல்லாததால் வயதான பிறகு தனக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்கள் எதுவும் பெறமுடியாத நிலையில் இருந்து வந்தார். பிரதமரின் பாராட்டுக்கு பிறகு இவர் ஆதார் கார்டுக்காக அலையும் தகவல் அதிகாரிகளை எட்டியது. உடனடியாக அதிகாரிகள் ஆதார் கார்டு பெறுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

பிரதமர் மோடியால் வீடு தேடி வந்த ஆதார் கார்டு- பன்மடங்கு மகிழ்ச்சியில் 105 வயது பாட்டி..
X

பாகீரதி அம்மாள் என்னும் மூதாட்டிக்கு 105 வயதாகிறது. கேரளாவை சேர்ந்த இவருக்கு வயதான பிறகு கல்வியில் ஆசை அதிகரித்தது. 4 ஆம் வகுப்பு தேர்வில்70% மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
கடந்த பிபரவரி 23 ஆம் தேதி மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாகிரதி அம்மாளின் கல்வி ஆர்வத்தை குறித்து பாராட்டி பேசினார். கல்வி மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வத்துக்காக தாம் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார்.

பிரதமர் மோடியால் வீடு தேடி வந்த ஆதார் கார்டு- பன்மடங்கு மகிழ்ச்சியில் 105 வயது பாட்டி..

பாகிரதி அம்மாளிடம் ஆதார் இல்லாததால் வயதான பிறகு தனக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்கள் எதுவும் பெறமுடியாத நிலையில் இருந்து வந்தார். பிரதமரின் பாராட்டுக்கு பிறகு இவர் ஆதார் கார்டுக்காக அலையும் தகவல் அதிகாரிகளை எட்டியது. உடனடியாக அதிகாரிகள் ஆதார் கார்டு பெறுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

இன்னும் இரண்டு நாள்களில் ஆதார் கார்டு கிடைத்துவிடும் என்றும் கூறியிருக்கிறார்கள். தள்ளாத வயதில் 4 வது படிப்பில்; 70% வெற்றி. பிரதமர் பாராட்டு வீடு தேடி வரும் ஆதார் கார்டு என்று பன்மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறார் பாகிரதி அம்மாள்.

newstm.in

Tags:
Next Story
Share it