Theme Check

நாளை 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! தெரிந்து கொள்வது எப்படி?

நாளை 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! தெரிந்து கொள்வது எப்படி?

நாளை 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! தெரிந்து கொள்வது எப்படி?
X

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் நாளை வெளியிட இருக்கிறது.

நாளை (ஜூன்20 ), காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த நிமிடமே மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்.

அதேபோன்று, நண்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். பள்ளி மாணவர்கள் உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

exam result

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it