Theme Check

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
X

கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டு நடைபெற இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ரத்து செய்தது. அதன்பிறகு, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமர்வு தேர்வு நடந்தது. இரண்டாம் அமர்வு தேர்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு அமர்வுகள் கொண்ட நடைமுறை இனி தொடராது என்றும், பழைய முறைப்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரிய தேர்வுகள் தொடரும் எனவும் சிபிஎஸ்இ தற்போது தெரிவித்துள்ளது.

வகுப்புகள் வழக்கம்போல முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளதால் இந்த முடிவை சிபிஎஸ்இ எடுத்துள்ளதாக தெரிகிறது.

இருந்தாலும், மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் 2023-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாட அளவு குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Next Story
Share it