10, 12ஆம் வகுப்பு பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!!
10, 12ஆம் வகுப்பு பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று வரும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 24ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி ஆங்கில மொழித் தேர்வும், மே 5ஆம் தேதி கணிதத் தேர்வும் நடைபெற உள்ளது.மே 10ஆம் தேதி அறிவியல் தேர்வும், மே 12ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வும், மே 14ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது.



12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்குகிறது. 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.




newstm.in
Next Story

