Theme Check

10, 12-ம் வகுப்பு மாணவர்களே, 2 வது திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு..!

10, 12-ம் வகுப்பு மாணவர்களே, 2 வது திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு..!

10, 12-ம் வகுப்பு மாணவர்களே, 2 வது திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு..!
X

கொரோனா பரவல் குறைந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க ஆயத்தமாக அவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த மாதம் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, 2-வது திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் 28-ம் தேதி 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடக்கிறது.

28-ம் தேதி மொழிப்பாட தேர்வும், 29-ம் தேதி ஆங்கிலம், 30-ம் தேதி கணக்கு, 31-ம் தேதி அறிவியல், ஏப்ரல் 1-ம் தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடக்கிறது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடக்கிறது. 28-ம் தேதி மொழிப்பாடம், 29-ம் தேதி ஆங்கிலம், 30-ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல் பாடங்களுக்கும், 31-ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

ஏப்ரல் 1-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணக்கு மற்றும் புள்ளியில், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங், சிவில் இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

4-ம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், டெக்ஸ்டைல் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 5-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

Next Story
Share it