10, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்று.. மாணவர்களுக்கு இன்றே கடைசி வாய்ப்பு !!
10, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்று.. மாணவர்களுக்கு இன்றே கடைசி வாய்ப்பு !!

10, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்று பெற ஐடிஐ மாணவர்களுக்கு மொழிப் பாடத் தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, பயிற்சி துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மண்டல இணை பயிற்சியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஐடிஐ முடித்த மாணவர்கள் 10, 12ஆம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ் பெற, மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைய வேண்டும். அதன்படி 10, 12ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகள் ஜூலை, ஆகஸ்டில் நடக்க உள்ளன.

எனவே, ஆர்வம் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் பங்கேற்க ஜூலை 17ஆம் தேதிக்குள் (இன்று) சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு இதை தெரிவிக்குமாறு அனைத்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in
Next Story

