பள்ளி மாணவர்களே.. இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு !!

பள்ளி மாணவர்களே.. இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு !!

பள்ளி மாணவர்களே.. இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு !!
X

தமிழகத்தில் 10 மற்றும் 12 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர ஆயத்தமாகி வருகின்றனர்.

இதில், 10ஆம் வகுப்பு தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மறுகூட்டலுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் வினாதாள்கள் மீண்டும் சரிபார்க்கும் பணி நடைபெற்று அண்மையில் முடிந்தது.

exam

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களை பயன்படுத்தி மறுகூட்டல் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

exam

மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் அன்றைய தினம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் மதிப்பெண் இன்று வெளியாவதால் மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

newstm.in

Next Story
Share it