ஒரே நாளில் வெளியாகும் 10 மற்றும் 12-ம் வகுப்பு ரிசல்ட்!! ரிலீஸ் தேதி இது தான்..!!
ஒரே நாளில் வெளியாகும் 10 மற்றும் 12-ம் வகுப்பு ரிசல்ட்!! ரிலீஸ் தேதி இது தான்..!!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாத்திப்பு குறைந்ததை தொடர்ந்து, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி, கடந்த மாதம் 6-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதன்பின், கடந்த 1-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி சுமார் 83 மையங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி, வரும் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படம். மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது திடீரென்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார். பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnresults.nic.in, https://dge2.tn.nic.in, https://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதுபோன்று, ஜூன் 20 காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது.

