Theme Check

தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!!

தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!!

தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!!
X

சென்னை அடுத்த புழல் லட்சுமிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மகன் சுரேஷ் (வயது 16) அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவர் வீட்டில் செல்போனில் அடிக்கடி பிரீ பையர் கேம் விளையாடியதைப் பார்த்த அவரது தாயார் மீனா கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுரேஷ் அவரது அறையில் தாயாரின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நீண்டநேரம் கதவு திறக்காததால், அவரது தாயார் மீனா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it