Theme Check

தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை!!

தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை!!

தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை!!
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தந்தை வாங்கிய கடனுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் 15 வயது மகன் கிருஷ்ணன், அந்தபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ராமலிங்கம், செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்ட நிலையில் ராமலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தை கேட்கச் சென்ற ராமலிங்கத்தின் மகனை வெள்ளையம்மாள் உடன் இருந்த அவரது ஆண் நண்பர் பச்சமுத்து என்பவர் அரிவாளால் வெட்டினார்.

trc

இதில் படுகாயமடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே பச்சமுத்துவை கைது செய்தனர்.

ஆனால் வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் சம்மந்தப்பட்ட பெண் குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கஞ்சநாயக்கன்பட்டியில் துவரங்குறிச்சி - செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

crime

இதற்கிடையே துவரங்குறிச்சி போலீசார் வெள்ளையம்மாளை தேடிச்சென்றிருந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it