ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை..!!
ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவன் பிரணய் குமார் (10). நேற்று முன்தினம் மாலை டியூஷனுக்கு சென்ற சிறுவன் பிரணய் குமார், அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுனின் பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு சாக்கு மூட்டை கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்தபோது, காணாமல் போன சிறுவன் பிரணய் குமார் சடலம் இருந்தது. போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கதுவா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆர்.சி.கோட்வால் கூறுகையில், “சிறுவனின் வாயில் டேப் ஒட்டப்பட்டுள்ளது. கைகால்களை கட்டிய நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். உடலில் காயங்கள் இருந்தன. கொலைக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும்” என்று கூறினார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் ஒருவர் பவன் குமார் சைனி, சிறுவனின் பக்கத்து வீட்டுக்காரர், அவர் மேஜர். மற்ற மூவரும் சிறுவர்கள். இந்த குற்றம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

