Theme Check

கொலை உள்பட 11 வழக்கு.. மருத்துவமனை நடத்திவந்த மருத்துவர் அதிரடி கைது !

கொலை உள்பட 11 வழக்கு.. மருத்துவமனை நடத்திவந்த மருத்துவர் அதிரடி கைது !

கொலை உள்பட 11 வழக்கு.. மருத்துவமனை நடத்திவந்த மருத்துவர் அதிரடி கைது !
X

பெரியதாழை பகுதியில் போலி மருத்துவரிடம் சாதாரணமாக விசாரணை நடத்திய போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவகுடியைச் சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், ‘அமுதசேகர் எலக்ட்ரோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். இங்கு சிலம்பரசன் அலோபதி மருத்துவம் செய்துவந்துள்ளார். ஆனால், அரசு அனுமதி பெறாமல் நெல்லை மாவட்டம் பெரியதாழை பகுதியில் சட்டவிரோதமாக மருத்துவமனை நடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, உவரி காவல் ஆய்வாளர் ஜமால் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நலப்பணிகள் துறை துணை இயக்குநர் ஜான்பிரிட்டோ ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த சிலம்பரசனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

arrested

அப்போது போலீசார் அதிர்ச்சி அடையும் வகையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, எலக்ட்ரோபதி பட்டதாரியான சிலம்பரசன், அலோபதி முறைப்படி மக்களுக்கு மருத்துவம் செய்துவந்தது உறுதியானது.

மேலும் அங்கு எலக்ட்ரோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இருப்பதாகவும், அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் பொய்யாக விளம்பரம் செய்து மாணவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும், அவர் மீது கொலை வழக்கு உட்பட 11 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதபோலி மருத்துவர் சிலம்பரசனை உவரி போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it