Theme Check

நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
X

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கென்யாவின் நைரோபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய வறுமை எதிர்ப்பு இயக்கமான ‘ஆக்ஸ்பாம்’ ஆய்வு ஒன்றை நடத்தியது.

சமீபத்தில் வெளியான அந்த ஆய்வின் அறிக்கையில், ‘கொரோனா பரவல் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலக அளவில் பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால், உணவுப் பொருட்களின் விலை தற்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஏழை மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கலை உண்டு பண்ணியுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it