Theme Check

போரில் 11 ஆயிரம் வீரர்கள் மரணம்!!

போரில் 11 ஆயிரம் வீரர்கள் மரணம்!!

போரில் 11 ஆயிரம் வீரர்கள் மரணம்!!
X

போர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 12ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் இருந்து இதுவரை 2,203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்து இருக்கிறோம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து இருந்தது.

kherson

உக்ரைனின் பிரியுத்னோய், ஜாவித்னே-பஜான்னே, ஸ்டாரொம்லைனோவ்கா, ஒக்தியாபிரஸ்கோய் மற்றும் நோவோமெய்ஸ்கோய் ஆகிய பகுதிகளை ரஷ்ய ஆயுத படைகள் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில், உக்ரைனுக்கான வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தியதில் இருந்து மொத்தம் 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.

kherson

999 கவச வாகனங்கள், 46 விமானங்கள், 68 ஹெலிகாப்டர்கள், 290 பீரங்கிகள், 117 நீண்ட தொலைவை தாக்கும் பீரங்கி துண்டுகள் மற்றும் 50 ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை போரில் வீழ்த்ப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, 60 பதுங்கு குழிகள், 454 வாகனஙகள், 3 கப்பல்கள், 7 ஆளில்லா விமானங்கள் மற்றும் 23 ரஷியாவை சேர்ந்த விமான அழிப்புக்கான போர் சாதனங்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it