பிட் அடித்து கையும் களவுமாக சிக்கிய 11-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!
பிட் அடித்து கையும் களவுமாக சிக்கிய 11-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை கனியூரில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் கலைச்செல்வன் (வயது 16) என்ற மாணவர் நேற்று வகுப்பு தேர்வின்போது பிட் அடித்ததாகவும் இதனை ஆசிரியர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவன் பள்ளியில் முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவரை சக மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கணியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

