Theme Check

போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்.. காதலில் விழுந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. !

போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்.. காதலில் விழுந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. !

போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்.. காதலில் விழுந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. !
X

திருத்துறைப்பூண்டி அருகே, ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தனது புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகள் சந்தியா (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவியின் புகைப்படத்தை சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் லோகேஷ் பதிவிட்டாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Controversial-decision-taken-by-a-student-after-a-controversial-photo-was-posted-on-Facebook
இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், மாணவியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it