Theme Check

11ஆம் வகுப்பு மாணவி திடீர் மாயம்! பெற்றோர் கதறல்!!

11ஆம் வகுப்பு மாணவி திடீர் மாயம்! பெற்றோர் கதறல்!!

11ஆம் வகுப்பு மாணவி திடீர் மாயம்! பெற்றோர் கதறல்!!
X

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் குருசாமி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகாந்த் (37) என்பவருக்கு மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜனனி (16), நந்திவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.

janani

இந்நிலையில், ஜனனி கடந்த 5ஆம் தேதி காலை திடீரென மாயமாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

newstm.in

Next Story
Share it