Theme Check

பக்கத்து வீட்டுக்காரர் திட்டியதால் 11 வயது சிறுமி தற்கொலை!!

பக்கத்து வீட்டுக்காரர் திட்டியதால் 11 வயது சிறுமி தற்கொலை!!

பக்கத்து வீட்டுக்காரர் திட்டியதால் 11 வயது சிறுமி தற்கொலை!!
X

சென்னை அருகே பக்கத்து வீட்டுக்காரர் திட்டியதற்காக 11 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவா(40) – வசந்தி தம்பதிக்கு வைஷ்ணவி(13), என்ற மகளும் நவீன்(8) என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் வீட்டில் இல்லாத போது கதவு சாத்தப்பட்டிருந்தது.

இரவு நவீன் வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது வைஷ்ணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அக்கம், பக்கத்தினர் வைஷ்ணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

death

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கர் கூறினர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் வைஷ்ணவி அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞருடன் பேசி வந்ததை, பெண் ஒருவர் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த இளைஞரின் பெற்றோர் வைஷ்ணவியை கண்டித்து அவரது பெற்றோர் வந்தால் தெரிவிப்பதாக கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தன்னை அந்த வீட்டில் இருந்த அக்கா திட்டியதாகவும் வைஷ்ணவி நோட்டில் எழுதி இருப்பதையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

newstm.in

Next Story
Share it