Theme Check

தெருநாய்கள் கடித்ததால் 11 வயது சிறுமி உயிரிழப்பு!!

தெருநாய்கள் கடித்ததால் 11 வயது சிறுமி உயிரிழப்பு!!

தெருநாய்கள் கடித்ததால் 11 வயது சிறுமி உயிரிழப்பு!!
X

காட்டுக்குள் மலம் கழிக்கச் சென்ற 11 வயது சிறுமி தெருநாய்கள் கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோங் பகுதியில் அனிஷா என்ற 11 வயது சிறுமி காலை 6 மணியளவில் மலம் கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். ஒரு மணி நேரமாகியும் அனிஷா வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று சிறுமியை தேடினர்.

அப்போது சிறுமியின் உடலை சுற்றி ஆறு முதல் ஏழு தெருநாய்கள் நிற்பதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குடும்ப உறுப்பினர்களின் கூச்சலிட்டு நாய்களை விரட்ட முயன்றனர்.

dog 1

அந்த சப்தம் கேட்டு கிராம மக்கள் பலர் அங்கு வந்து நாய்கள் மீது கற்களை வீசி தாக்கினர். நாய்களை விரட்டியதும் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிஷாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Girl

உடனடியாக ஊர்மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அனிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காவல்துறையினர் சில மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அனிஷாவின் உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து டோங்க் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it