Theme Check

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை.. கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு..!

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை.. கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு..!

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை.. கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு..!
X

கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறையிலுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்யுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, மீனவர்கள் 12 பேரும் ஜாமீனில் செல்ல விரும்பினால் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று நீதிபதி கூறியது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில்,12 மீனவர்களையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story
Share it