கீவ் பகுதியில் இருந்து மேலும் 1,200 உடல்கள் கண்டெடுப்பு.. உக்ரைன் அதிர்ச்சி தகவல் !!
கீவ் பகுதியில் இருந்து மேலும் 1,200 உடல்கள் கண்டெடுப்பு.. உக்ரைன் அதிர்ச்சி தகவல் !!

கீவ் பகுதியில் இருந்து மட்டும் 1,200 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகள் ஒரு மாதத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல்கள் தொடர்கின்றனர். இந்த போரால் உக்ரைனின் பெரும்பாலான நகர்ப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா தரப்பிலும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உக்ரைனில் இருந்து சுமார் 40 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். தொடக்கத்தில் அமைதியாக தாக்குதல் நடத்திய ரஷ்யா அடுத்தடுத்த நாட்களில் தீவிரப்படுத்தியது. குடியிருப்புகளையும் குறிவைத்து ஏவுகணைகளை வீசியது.
அந்த வகையில், கடந்த வாரம் உக்ரைனின் கீவ் அருகே புச்சா பகுதியில் இருந்து 400 உடல்கள் கைப்பற்றப்பட்டது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மக்கள் ரஷ்ய வீரர்களால் துன்புறுத்திக் கொல்லப்பட்டது அதில் தெரியவந்தது.
இந்நிலையில் உக்ரைனின் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 1,222 உடல்கள் கைப்பற்றுள்ளதாக அந்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா தெரிவித்துள்ளார். மேலும் புதைசாக்கடையில் இருந்து இரண்டு சடலங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் உக்ரைனில் இதுவரை 1,793 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,439 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in