Theme Check

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!
X

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,32,70,577 ஆக அதிகரித்துள்ளது.

India-corona

கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,817 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 7,985 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,26,82,697 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 63,063 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 5,19,903 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 85,69,10,352 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

India

இதுவரை 195.84 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it