Theme Check

ஓடும் அரசு பேருந்தில் இருந்து குதித்த 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

ஓடும் அரசு பேருந்தில் இருந்து குதித்த 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

ஓடும் அரசு பேருந்தில் இருந்து குதித்த 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
X

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சினிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் நவ்யா ஸ்ரீ (வயது 17). இவர் கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாணவி நவ்யா ஸ்ரீ பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் அரசு பேருந்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது பேருந்து சினிகிரிப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், மாணவி பேருந்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருடைய கை, கால் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. படுகாயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 12-ம் வகுப்பு மாணவி நவ்யாஸ்ரீ சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்து வழக்கம்போல நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என மாணவியின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Next Story
Share it